ஜூலை 23, 2025
திருநெல்வேலி, புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே என்.ஜி.ஓ ‘பி’ காலனிக்கு செல்லும் சாலையில் உள்ள ஸ்ரீ ஒத்தப்பனை சுடலை மாடசுவாமி திருக்கோவிலில் நேற்று (ஜூலை 22, 2025) ஆடி 6 செவ்வாய்க்கிழமையில் கொடை விழா சிறப்பாக நடைபெற்றது. சுமார் 400க்கும் மேற்பட்டோர் கொடை விழாவில் பங்கேற்று சுவாமியைத் தரிசித்து பிரசாதத்தை வாங்கிச்சென்றனர். இரவில் வில்லுப்பாட்டு பாடப்பட்டது.













