கோயம்புத்தூரில் 27/07/2025 அன்று நடக்க இருக்கின்ற ஏழாவது சர்வதேச கராத்தே போட்டிக்கு கே கே ஆர் அகாடமி கராத்தே மாணவ மாணவிகள் தேர்வு பெற்றனர். அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் டவுன் சங்க தலைவர் ரொட்டேரியன் அட்வகேட் முகமது ரிஸ்வான் அவர்கள் தமிழக வீரர்கள் இந்திய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து மூன்று பெரிய பக்கெட் குளுக்கோஸ் கொடுத்துள்ளார்கள். இணைச்செயலாளர் ரொட்டேரியன் கணேஷ் சொக்கலிங்கம் பிள்ளை அவர்கள் பயிற்சியாளரின் முக்கியத்துவத்தை பற்றியும் சிறப்பாக பேசினார். இதில் ரோட்டரி உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். இறுதியாக கே கே ஆர் அகாடமி நிறுவனர் முன்னாள் ரோட்டரி கிளப் நாகர்கோவில் டவுன் சங்க தலைவர் கராத்தே ராஜ் வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினார்கள்.













