ரோட்டரி கிளப் ஆப் பேர்ல்சிட்டியின் 32வது தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகக் குழு பொறுப்பேற்பு விழா சத்யா ரிசார்ட்ஸில் நடைபெற்றது. சங்கத்தின் புதிய தலைவராக விக்டர், செயலாளராக கிருஷ்ணசாமி மற்றும் நிர்வாக குழுவினர் பொறுப்பேற்றனர். ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு காந்தி புதிய தலைவர் மற்றும் செயலாளருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் மற்றும் சத்யா குழுமங்களின் தலைவர் ஜான்சன் கலந்து கொண்டனர். ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு காந்தி கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். கௌரவ விருந்தினர் மயில் பாலசுப்பிரமணியம், உதவி ஆளுநர் பரமேஸ்வரன் வாழ்த்தி பேசினார்கள். நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. மாநகராட்சி மேயர் ஜெகன் சங்கத்தின் கௌரவ உறுப்பினராக இணைக்கப்பட்டார். வீ கேன் டிரஸ்ட், ஜெயின்ட்ஸ், அறம் சார் அறக்கட்டளை ஆகிய சேவை நிறுவனங்கள் கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சங்கத்தின் உறுப்பினர்கள் அவர்களது குடும்பத்தினர் மற்றும் தூத்துக்குடியில் உள்ள பல்வேறு சங்கத்தினர், தொழிலதிபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை உடனடி முன்னாள் தலைவர் முனைவர் விக்னேஷ் மற்றும் உறுப்பினர்களும் செய்திருந்தனர்.













