தென்காசி ஜூலை 3, 2025
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் கடையநல்லூர் சென்ட்ரல் சுழற் கழகத்தின் 2025-26ஆம் ஆண்டிற்கான தலைவராக கோமதி அம்பிகை பயணிகள் மற்றும் சுற்றுலா பேருந்து உரிமையாளர் வை சு வைரவன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தலைவராக பொறுப்பேற்ற பின் உறுப்பினர்கள் மற்றும் மருத்துவர்களுடன் சென்று கடையநல்லூர் புகைவண்டி நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளின் ரயிலில் ஏறவும் இறங்கவும் சக்கர நாற்காலி ஒன்றை தலைவர் பதவியேற்ற முதல் நாளில் முதல் சேவை என்ற அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கினார்.













