ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் வாராந்திர கூட்டம் தலைவர் மரியா சில்வர்ஸ்டர் தலைமையில் நடைபெற்றது. கடந்த வார நிகழ்வு குறித்து செயலாளர் முத்து கருப்பப்பிள்ளை பேசினார்.
பொன்னையா ரோட்டரி பெயர் வாசித்தார் நான்கு வழி சோதனை குறித்து சிவசங்கர் பேசினார். பிரபா அனைவரையும் வரவேற்று பேசினார். டாக்டர் அருணாச்சலம் ரோட்டரி குறித்த தகவல்களை தெரிவித்தார் சிறப்பு விருந்தினர் டாக்டர் சித்ராவை முன்னாள் ஆளுநர் ஜெசிந்தா தர்மா அறிமுகப்படுத்தி பேசினார். பொருளாளர் அருள்மொழி நங்கை தலைவர் மரியா சில்வர்ஸ்டர், குமார் ஆகியோர் அறிவிப்புகளை வெளியிட்டனர்.
அனிதா நடராஜன் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார். விஜயகுமாரி சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கினார். செந்தில் தேசிய கீதம் பாடினார்.















