18/07/2025 அன்று மாலை நாகர்கோவில் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பாக புத்தேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து ‘Interact Club Installation’ நடைபெற்றது. இதை நாகர்கோவில் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் Rtn Adv Rizwan தலைமை ஏற்று நடத்தினார். உதவி ஆளுநர் Rtn Er தக்ஷிணாமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். interact club தலைவியாக செல்வி வி.தியா ஸ்ரீ பொறுப்பேற்று ஏற்புரை வழங்கினார். அதைத் தொடர்ந்து செயலாளர், பொருளாளர் மற்றும் எட்டு செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர்.Interact Chairman Rtn Er. Senthil Kumar அவர்கள் தலைவியை கௌரவப்படுத்தினார். தலைமை ஆசிரியை விஜிலா அவர்கள் ரோட்டரி நாகர்கோவில் டவுன் சங்கம் சார்பாக வந்திருந்த அனைவரையும் வாழ்த்தி பேசினார். RCC Chairman Rtn Mathavan அவர்கள் உணவுப் பழக்கத்தைப் பற்றிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு வழங்கினார். Tree Plantation Chairman Rtn E. ஐயப்பன் அவர்கள் மரங்கள் நடுவதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிப் பேசினார். பின்பு குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் கொடுத்தார். மேலும் அதை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவி ரோகினி அவர்கள் கலந்து சிறப்பித்தார். செயலாளர் Rtn சிதம்பரநாதன் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். முன்னாள் தலைவர் Rtn செல்வராஜ், Rtn பழனிவேல், Rtn கணேஷ் , Rtn செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.













