காமராஜர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு நாகர்கோவில் டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக பொட்டல் குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் வைத்து இன்ட்ராக்ட் கிளப் ஆனது சங்க தலைவர் முஹம்மது ரிஸ்வான் அவர்கள் தலைமையில் துவங்கப்பட்டது. பொருளாளர் அமிர்தராஜ் அவர்கள் ரோட்டரி வணக்கம் தெரிவித்தார். தலைவர் முஹம்மது ரிஸ்வான் அவர்கள் தலைமை உரையாற்றினார். உதவி ஆளுநர் தக்ஷிணாமூர்த்தி அவர்கள் கல்வியின் சிறப்பை பற்றி பேசினார். இன்ராக்ட் சங்க சேர்மன் பிளாஸ்டிக் தடுப்பதை பற்றிய விழிப்புணர்வு வழங்கினார். ட்ரீ பிளான்டேஷன் சேர்மன் E. ஐயப்பன் அவர்கள் மரம் வளர்ப்பதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பேசினார். இதில் ஒருங்கிணைப்பாளர் T. ஐயப்பன்முன்னாள் தலைவர் செல்வராஜ் முன்னாள் உதவி ஆளுநர் சங்கர பாண்டியன் மற்றும் நாகர்கோவில் டவுன் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பள்ளியில் பொறுப்பாளர் எல் கண்ணன் அவர்கள் நன்றியுரை கூறி தேசிய கீதத்துடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. பின்னர் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.














