டாக்டர் பிரேமச்சந்திரனின் மகள் தேவ மனோகரி பகிர்தலில் மகிழ்ச்சி என்ற தலைப்பில் பேசியதாவது
எனது தந்தை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஆஸ்பத்திரி மட்டுமே கவனித்து வந்தார்கள். அதன் பிறகு இதய ஆபரேஷன் செய்ததற்கு பிறகு நமக்கு பிடித்ததை செய்ய வேண்டும் எனக் கூறி பிரேம கானங்கள் ஆரம்பித்தார்கள். குழந்தையாக இருக்கும் போது இரண்டு முறை மட்டும் கொடைக்கானல், ஊட்டி இடங்களை சுற்றுலா சென்றுள்ளோம். 15 ஆண்டுகளுக்கு முன்பாக வெறும் பத்து ரூபாய் மட்டுமே நோயாளிகளிடம் பெறப்பட்டது. எனது தந்தை வள்ளல் தன்மை கொண்டவர். சொல்லாமல் அனைவருக்கும் கொடுப்பது பகிர்தல். கடவுளுக்கு கொடுப்பதை விட மனிதர்களுக்கு கொடுங்கள் என்று எனது தந்தை சொல்லி உள்ளார்கள். அப்பாவை போல அம்மாவும் கஷ்டப்படுறவங்களுக்கு உதவி செய்வார்கள்.
சிறப்பு விருந்தினரை சரோஜினி அறிமுகப்படுத்தி பேசினார். சுரேஷ் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார். பிஹெச்எம் லெவல் 3 ரோட்டரி பின் சிறப்பு விருந்தினர் தேவ மனோகரி பட்டய தலைவர் மேகலிங்கத்திடம் வழங்கினார். தொடர்ந்து டாக்டர் பிரேமசந்திரனின் பிரேம கானங்கள் நடைபெற்றது. சங்க புல்லட்டின் மலரை சிறப்பு விருந்தினர் வெளியிட அதனை முன்னாள் தலைவர் சங்கரன் பெற்றுக் கொண்டார்.














