ரோட்டரி கிளப் ஆப் மார்த்தாண்டம் டவுன் வாராந்திர கூட்டம் இன்று 01-07-2025 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு தலைவர் Rtn சோனி நேதில் முன்னிலையில் தொலையாவட்டம் ஜீவன் ஜோதி முதியோர் இல்லத்தில் வைத்து நடைப்பெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக எமது கிளப்பின் துணை ஆளுநர் Rtn ஜேசுதாசன் அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.மேலும் எமது கிளப்பின் அட்வைசர் Rtn இராபர்ட் சிபு தாஸ் அவர்களும் வருகை தந்துள்ளார்கள். முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.அதில் ரோட்டரி மாவட்ட ஆளுநரின் முதல் நாள் முதல் சேவை என்ற திட்டத்தின் படி தொலையாவட்டம் ஜீவன் ஜோதி முதியோர் இல்லத்தில் வீல் சேர் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் கிளப்பின் செயலாளர் Rtn ஜேசுராஜ், சர்ஜன்ட்ஆம்ஸ் Rtn ஷாஜி,நிர்வாக செயலாளர் Rtn ஜோணி நியூ பிகின் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்













