ரோட்டரி கிளப் ஆப் பாளையங்கோட்டை தலைவர் எல்இடி மாரியப்பன் பதவியேற்பு விழா
ரோட்டரி கிளப் ஆப் பாளையங்கோட்டை தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா பாளையங்கோட்டையில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைவர் சாமுவேல் தலைமை தாங்கினார். செயலாளர் ராகவ் சுந்தர் கடந்த ஆண்டு அறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் தினேஷ் பாபு கலந்து கொண்டார். உதவி ஆளுநர் பாலமுரளி முன்னிலை வகித்தார். தலைவர் சாமுவேல் புதிய தலைவர் எல் இ டி மாரியப்பனுக்கு காலர் அணிவித்து ஹேவல் வழங்கினார். முன்னாள் உதவி ஆளுநர் மயில் பாலசுப்ரமணியன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.















