ஸ்ரீவில்லிபுத்தூர் பிரண்ட்ஸ் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா,
ஸ்ரீவில்லிபுத்தூர் பிரண்ட்ஸ் ரோட்டரி சங்கத்தின் 5ம் ஆண்டு பதவியேற்பு விழா ஸ்ரீவில்லிபுத்தூரில் ராமராஜ் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆளுநர் Rtn. Major Donor. Er. J. தினேஷ் பாபு தலைமையில் உதவி ஆளுநர் Rtn.MPHF. G. முருகதாசன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கலசலிங்க பல்கலைக்கழக வேந்தர் திரு Dr. K. ஸ்ரீதரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் தலைவர் திரு Rtn. PHF. K.பால்சாமி அவர்கள் 25-26 ஆண்டின் தலைவர் திரு Rtn. PHF. Er. T. கந்தசாமி அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 2025-26 ஆம் ஆண்டறிக்கையை நிர்வாக செயலாளர் திரு Rtn. PHF. S. ஜாகிர் உசேன் சமர்ப்பித்தார். இந்நிகழ்வில் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்படும் வகையில் வீல் சேர் ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர் பிரண்ட்ஸ் ரோட்டரி சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்டது மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் 10ம் மேற்பட்ட பள்ளியைச் சார்ந்த 24-25ம் கல்வி ஆண்டில் 10 & 12 பயின்று பள்ளியில் முதல் 2 இடம் பிடித்த மாணவ மாணவிகள் சுமார் 45 பேருக்கு அவர்களை கௌரவப் படுத்தும் விதமாக பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது. மற்றும் யோகா போட்டியில் மாவட்ட மற்றும் மாநில அளவில் வென்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்து. ஸ்ரீவில்லிபுத்தூர் பிரண்ட்ஸ் ரோட்டரி சங்கம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியுடன் இணைந்து நடத்தும் ஆத்ம வனம் (எரிவாயு தகனமேடை) பணிபுரியும் தொழிலாளர்களின் சேவையை பாராட்டி கௌரவப்படுத்தப்பட்டது.மாற்றுத்திறனாளிகள் சுமார் 20 நபர்களுக்கு மேல் அரிசி பல சரக்கு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் அந்த தானத்திலும் முதல் தானம் கண்தானம் ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகளான Rtn. Major Donor. PAG. N.S. வேலாயுதம் மற்றும் Rtn.Er. J. பாலசுப்பிரமணியம் அவர்களின் தாயாரின் கண்கள் சுமார் 4 பேருக்கு இலவசமாக வழங்கினார்கள் ஆகையால் அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக மாவட்ட ஆளுநர் Rtn. Major Donor Er. J. தினேஷ் பாபு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது இந்நிகழ்வை பட்டய தலைவர் Rtn. Major Donor. PAG. N.S. வேலாயுதம், மகாத்மா பள்ளி தாளாளர் திரு Rtn. PHF. G. முருகேசன் திரு Rtn. PHF. G. சந்திரன் திரு Rtn. PHF. PP. K.B. அங்குராஜ் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் ஏற்பாடு செய்தனர். நிகழ்ச்சி நிறைவாக செயலாளர் திரு Rtn. PHF. Er. V. ராஜு நன்றி கூறினார்.













