ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி ராக் சிட்டி – 41வது பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது
திருச்சிராப்பள்ளி:
ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி ராக் சிட்டியின் 41வது ஆண்டு பதவியேற்பு விழா ஜூலை 5, 2025 அன்று மாலை 7 மணிக்கு திருச்சியின் சென்ட்ரல் பஸ்ஸ்டாண்டில் அமைந்துள்ள Redfox Hotels மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் Rtn. S. ஆனந்த் கார்த்திக் அவர்கள் புதிய தலைவராகவும், Rtn. அரோக்கிய ஜெரால்ட் ஹென்சில் மார்டின் அவர்கள் செயலாளராகவும் பொறுப்பேற்றனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக Rtn. மேஜர் டோனர் டாக்டர் J.W. எபனேஷ் பென்சம், (மாவட்ட ஆளுநர் 2027-28, ரி.ஐ. மாவட்டம் 3212) கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். அவர் தனது வாழ்த்துரை மூலம் புதிய குழுவிற்கு வழிகாட்டும் கருத்துகளை பகிர்ந்தார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை முன்னாள் தலைவர் Rtn. ஜோசப் விஜய் மற்றும் செயலாளர் Rtn. வி. கவுரிசங்கர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
புதிய நிர்வாக குழுவினர் அனைவருக்கும் விழாவில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதில் பல ரோட்டேரியன்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மகளிர் கிளப் உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இது ஒரு சீரான வழிகாட்டும் நிகழ்வாகவும், புதிய நிர்வாகம் பல சேவைகள் செய்வதற்கான ஒரு புதிய தொடக்கமாகவும் அமைந்தது.













